Monday, March 02, 2009

530. வக்கீல்-போலீஸ் மோதலும், வரிப்பண விரயமும்

ஹைகோர்ட் வளாகத்தில் நடந்ததை அந்த ஆர்டரிலேயே கூறுகிறேன்.  சு.சுவாமிக்கு உதையும், முட்டையடியும் வழங்கப்பட்டதும், உயர்நீதி மன்ற நீதிபதிகள் அதற்குக் காரணமானவரை கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டதும்,  போலீஸ் வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயன்றபோது நடந்த கைகலப்பும்,  அதன் தொடர்ச்சியாக நடந்த பரஸ்பர கல்வீச்சும், காவல் நிலையத்தை வக்கீல்கள் எரித்ததும், வன்முறை வலுத்ததும், போலீஸ் தடியடி நடத்தியதும், சில  வாகனங்களும் நொறுங்கியதும் நாம் அறிந்தது தான்!!

மேலே நடந்ததற்கும் பொது மக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.  ஒரு தனிமனிதரைத் தாக்கியதிலிருந்து தொடங்கிய பிரச்சினை இது.  யார் மீது, எவ்வளவு சதவிகிதம் தவறு என்று ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல! 

சில பாயிண்டுகள் மட்டும்:


1.  கோர்ட் வளாகத்தில் நடந்த வன்முறையில் காயமடைந்த போலீசார், அரசு மருத்துவமனைகளிலும், வக்கீல்கள் அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், வக்கீல்கள் போலீஸ் என்று யார் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று  அரசு கூறியுள்ளதாக செய்தி வந்துள்ளது.  இதற்கு முன் நடந்த வன்முறைகளில், அப்பாவிப் பொதுமக்கள் அடிபட்டபோது, அவர்களின் தனியார் மருத்துவமனை சிகிச்சைச் செலவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா ?

2. வன்முறையன்று, உடைந்த/சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என்றும் தெரிகிறது!  இது தவிர, ஹைகோர்ட் வளாகச் சீரமைப்புப் பணியையும் அரசு தான் மேற்கொள்ள வேண்டும்!

3. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, கிட்டத்தட்ட 45(!) பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டுள்ளது. விசாரணை முடிந்து ரிப்போர்ட் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.  இந்தக் குழுவில் forensic ஆட்களும் இருக்கின்றனர்!  இதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை.

4. சி.பி.ஐ விசாரணை போதாதென்று, ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷனை, சுப்ரீம் கோர்ட் நியமித்து உள்ளது.  அவரும் சென்னை வந்து விசாரணையில் இறங்கியுள்ளார். அவர் உள்துறை செயலரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் விசாரனை நடத்தியுள்ளார்.

அரசு, நீதித்துறை சார்ந்த பலரின் நேர விரயம் ஒரு புறம் இருக்கட்டும்.  ஒரு அனாவசியப் பிரச்சினையால் விளைந்த வன்முறையின் தொடர்ச்சியாக, பொதுமக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறதே என்பது என்னைப் போன்ற பொதுமக்களின் ஆதங்கம் :-(

இந்த விசயம் ஒரு சாம்பிள் தான்.  இது போல, பல உள்ளன.  இது போன்ற கொடுமையை சுட்டவே,   இந்த பாயிண்டுகளை எழுப்பினேன்!   2 வேளை ஒழுங்காக சாப்பிட முடியாத ஏழைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் இந்த நாட்டில் ? 

எ.அ.பாலா

9 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

The lawyers are impossible and
they have to be taught a lesson
but the policemen are no angels either. That too is true.
Regards,
Dondu N. Raghavan

said...

இதுபோல நேர விரயமும் பணவிரயமும் உள்ள தவிர்க்கப்படவேண்டிய ஒன்று கிரிக்கெற் என்றால் ஒத்துக்கொள்விங்க தானே!

enRenRum-anbudan.BALA said...

Dondu Sir,
You are right.

அறிவுக்கொழுந்து அனானி,

நான் சொல்றது மக்களின் வரிப்பணத்தை வேஸ்ட் பண்றதை பற்றி.

மத்தபடி, தனிப்பட்ட ஒரு ஆளு, அவன் ஏழையோ, பணக்காரனோ, அவனது பணத்தை கிரிக்கெட் பார்க்க செலவழிச்சா, அது பத்தி எனக்கு கருத்தொண்ணும் கிடையாது.

கிரிக்கெட் தவிர்க்கப்பட வேண்டியதா இல்லையா என்பதை அவரவர் தீர்மானிக்க வேண்டும். நீரும் நானும் சேர்ந்து அல்ல, ஏதாவது புரியுதா ??? :)

RAJI MUTHUKRISHNAN said...

A needless, violent episode, started by the lawyers, who are wholly responsible for the entire destruction of property and injuries to people. The lawyers who behaved like hooligans, and not educated people who represent the law of the country should be ashamed. No punishment is too severe for them and any findings by any commission to the contrary would be dishonest. Let the lawyers foot the bill for EVERYTHING, and not the taxpayers.

The policemen acted under provocation. They were condemned when they did not take any action outside the Law College when violence erupted there a couple of months ago. 'Damned if they do, damned if they don't'

கிருஷ்ண மூர்த்தி S said...

நோய் நாடி நோய் முதல் நாடி என்பதற்கேற்ப, இதன் மூல காரணங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் ஒழிய, இந்த மாதிரி அவலங்களைத் தீர்ப்பதற்கு முடியாது.

பிரிட்டிஷ் பாராளுமன்ற அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு அரசிய் சாசனத்தை ஏற்றுக் கொண்டு குடியரசாக அறிவித்துக் கொண்டோம். 1947 களில், அரசியல் சாசனத்தை நிர்ணயம் செய்வதற்காக கூடிய சபையில், இங்கே அதிகார அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்-முதலாவதாக, சட்டம் இயற்றும் அமைப்பு, சட்ட சபை/நாடாளுமன்றம், இரண்டாவதாக, சட்டத்தை அமல்படுத்துகிற அதிகார அமைப்பு, மூன்றாவதாக, சட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டதா என்பதை கண்காணித்து, நீதி வழங்கும் நீதிமன்றங்கள் , இந்த மூன்றில் எது உச்ச அதிகாரத்தை கொண்டது என்பதை ஒரு காரணத்தோடு தான் வரையறுக்காமல் விட்டிருப்பதாக, திரு அம்பேத்கர் சொல்கிறார். பாராளுமன்ற ஜனநாயகத்தில், முதிர்ச்சி அடையும் வரை, இந்த மூன்றும் மூன்று தூண்களாக இருக்கும்-எதோ ஒன்று தவறு செய்யும் போது மற்ற இரண்டும் அல்லது ஒன்றாவது check and balance சமன் செய்யும், அப்படி இருப்பதற்காகவே, இதில் எது உயர்ந்தது என்பதை வரையறுககவில்லை என்றார் திரு அம்பேத்கர்.

நடந்தது என்ன?
தவறு நடக்கும் போது தட்டிக் கேட்பது என்பதற்குப் பதிலாக, உடந்தையாக அல்லது பலநேரங்களில் கூட்டாளியாகவே இருப்பது என்ற நிலையை, 1970 களில் நம்முடைய அரசியல் வாதிகள் உருவாக்கினார்கள். பலமான தூண்கள் என்று கருதப்பட்டவை, ஒரு அழுகிய தக்காளியோடு இருக்கிற நல்ல தக்காளியும் கேட்டுப் போகும் என்கிற மாதிரி
இப்படி நாறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு T N சேஷனை சமாளிக்க முடியவில்லையா, தேர்தல் கமிஷனையே நீர்த்துப் போகச் செய்கிற மாதிரி, அதை மூன்று பேர் கொண்டதாக மாற்று, தலைமைத் தேர்தல் கமிஷனர் என்று சொல்லப் பட்டாலும் கூட, தலைமை அவருக்கில்லை, எவர் அரசுடன், அதாவது அரசியல்வாதிகளுடன் ஒத்துப் போகிறாரோ அவரே எல்லாம் என்று செய்தார்கள் இல்லையா? இப்போது கூட, அரசுடன் ஒத்துப் போகிற ஒருவர் தான் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆகப் போகிறார். அவர் மேல் சொல்லப் பட்ட குற்றச் சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசோடு ஒத்துப் போகும் ஒரு ஜனாதிபதி, இப்படிப் பட்டவர்களைத் தான் இந்த நாற்பத்தி ஐந்தாண்டு கால ஜனநாயகம் உருவாக்கியிருக்கிறது.

இத்தனைக்கும் மூல காரணமாக, நமதுதேர்தல் அமைப்பு இருக்கிறது.

நமது தேர்தல் முறையில் உள்ள குறைகள், மற்றைய ஜனநாயக முறையில் உள்ள தேர்தல் முறைகள் இவைகளுடன் ஒப்பிட்டு, தினமணி நாளிதழில் கணக்கன் என்ற புனைபெயரில் திரு A N சிவராமன் எழுதியது, இன்றைக்குப் பொருத்தமாகவும், ஒரு நல்ல தீர்வைச் சொல்வதாகவும் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

winner takes all என்கிற மட்டத்தில் ஒசத்தி முறை மாறினால் ஒழிய, புரையோடிக் கிடக்கும் இத்தனை அவலங்களையும் சரி செய்ய இயலாது.

மாயவரத்தான் said...

Same IDLY VADAI style yellow color?

said...

Awareness should be created to make violence free society.

We should save our country from
cheap, fruad uneithcal sources.

I think it will happen only when all people are affected.

We have to remeber RAMA killed
RAVANAN, KRISHA killed NARAKASWARAN. These happend when violence reached to the TOP extreme.

I expect same thing to happen.

ஸ்ரீ.... said...

நேர்மையான கேள்விகள். ஆள்பவர்கள் பதில் சொல்வார்களா?

ஸ்ரீ....

இந்தியன் said...

இது விசயத்தில் யார் குற்றவாளி என்பதை விளக்கமாக நாளை தருகிறேன்
உங்கள் அன்பன்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails